TamilsGuide

இங்கிலாந்திற்கு பயணமாகும் ட்ரம்ப் - கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகிற16ஆம் திகதி இங்கிலாந்திற்குச் செல்லவுள்ளார்.

இந்த பயணத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை ட்ரம்ப் சந்திக்கவுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் ட்ரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்கா-இங்கிலாந்து இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

Leave a comment

Comment