TamilsGuide

இட்லி கடை பெயர் வைத்தது ஏன்? - தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீசாகிறது.

இந்நிலையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

பொதுவாக படத்திற்கு நாயகனின் பெயரை தான் டைட்டிலாக வைப்பார்கள். என்னுடைய சின்ன வயது அனுபவங்களை வைத்தும் நான் பார்த்த நிஜ மனிதர்களை வைத்தும் ஒரு படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படி உருவானது தான் இட்லி கடை.

என் சின்ன வயதில் நான் பூக்களைப் பறித்து அதில் கிடைக்கும் காசில் வாங்கி சாப்பிட்ட இட்லியின் ருசி இன்று நான் எவ்வளவு பெரிய ரெஸ்டாரண்டில் சாப்பிட்டாலும் கிடைக்கவில்லை.

நாம் நம்முடைய வேர்களையும் வரலாறையும் எப்போதும் மறக்கக் கூடாது. இட்லி கடை படம் அதைப் பற்றிதான் பேசுகிறது. என்னை படங்களில் மட்டும் பார்த்து ரசியுங்கள். மற்ற நேரம் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
 

Leave a comment

Comment