TamilsGuide

எலும்பு முறிவை 3 நிமிடத்தில் சரிசெய்யலாம் - புதிய பசையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், மீண்டும் எலும்புகள் சரி ஆவதற்கு சில மாதங்கள் வரை ஆகிறது. அதுவரை பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டால், இனி அறுவை சிகிச்சைக்கு பதில், 3 நிமிடத்தில் அதனை ஒட்டி சரி செய்யும் பசையை சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

'Bone-02' என அழைக்கப்படும் இந்த பசை, இரத்தம் இருந்தால் கூட, 3 நிமிடங்களில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடும் என்றும், 150 பேருக்கு நடந்த சோதனை வெற்றி அடைந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
 

Leave a comment

Comment