TamilsGuide

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவிடுவேன் - நியூயார்க் மேயர் வேட்பாளர் பேச்சால் பரபரப்பு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 4 ஆம் தேதி நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment