TamilsGuide

சினிமாவில் பாடலாசிரியராக வருவதே நான் காணாத கனவு தான்- தேவ் சூர்யா

தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரித்த திரைப்படம் "இந்திரா." அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கத்தில் உருவான இந்திரா திரைப்படத்தில் வசந்த் ரவி மற்றும் மெஹ்ரீன் பிர்சதா இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர், சுமேஷ் மூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்திரா திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் தேவ் சூர்யா.

இவர் அளித்த பேட்டி பின்வருமாறு:-

தமிழ் திரையுலகில் நான் "இந்திரா" திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானேன். முன்னதாக 2018ஆம் ஆண்டு கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தேன். எனினும், அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை.

எனக்கு தமிழ் மொழி மீது இருந்த விருப்பம் தான் பாடலாசிரியர் ஆகியிருக்கிறேன்.

திரையுலகில் பாடலாசிரியராக நான் அறிமுகமான படம் இந்திரா தான். இந்தப் படம் தொடங்கும் முன்பிருந்தே நான் இசையமைப்பாளர் அஜ்மல் தஹ்சீனுடன் இணைந்து அவ்வப்போது ஜேமிங் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தோம். அந்த வகையில் தான் இந்திரா படத்திற்கு பாடலாசிரியராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

சினிமாவில் பாடலிசிரியராக வருவதே நான் காணாத கனவு தான். இதை கனவு என்று கூற முடியாது, ஆனால் மாற்றத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a comment

Comment