தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கதுரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்திருக்கும் ஹன்சிகா, விரைவில் அவரை விவாகரத்து செய்யப்போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் 2021-ல் நான்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்தநிலையில் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மாமியார் மோனா மற்றும் ஹன்சிகா மீது நான்சி புகார் தெரிவித்தார்.
இதன்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனக்கு எதிரான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி, மும்பை ஐகோர்ட்டில் ஹன்சிகா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று தள்ளுபடியானது.
இதையடுத்து ஹன்சிகா மீது விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி கிடைத்து இருக்கிறது. விரைவில் ஹன்சிகா விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


