TamilsGuide

உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நிறுத்திவைப்பு - ரஷியா அறிவிப்பு

உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவாா்த்தைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா அறிவித்தது.

இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான பேச்சுவாா்த்தைகளை மேற்கொள்ளும் வாயில்கள் திறந்துதான் உள்ளன.

ஆனாலும் தற்போதைய நிலையில் நாங்கள் உக்ரைன் அமைதிப் பேச்சுவாா்த்தைகளை நிறுத்தி வைக்கிறோம்.

போா் நிறுத்த பேச்சுவாா்த்தைக்கு ரஷியா எப்போதுமே தயாராகவே உள்ளது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவாா்த்தைகளில் தலையிட்டு முட்டுக்கட்டை போடுகின்றன. இதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

முன்னதாக ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபா் புதினுடன் தனக்கு நட்புறவு இருந்தாலும் உக்ரைன் போரை அவா் முடிவுக்குக் கொண்டுவராமல் இருப்பது எரிச்சலை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment