ஹட்டன்-நோர்வூட் பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருவர் கயமடைந்துள்ளர்.
இன்று காலை 7-45 மணியளவில் நோர்வூட் தியசிகம பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்தில் ஒரு மாணவனும், முச்சக்கர வண்டியின் சாரதியுமே கயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தியசிறிகம பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, நோர்வுட் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிச்சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது.
முச்சக்கர வண்டியில் ஆறு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட ஏழு பேர் பயணித்துள்ளனர்.
மேலும் காரினை பெண் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்து நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


