TamilsGuide

தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்

உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன் இரண்டு உணவகமும் நேற்றிலிருந்து (11) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேற்பார்வைப் பொது சுகாதார பரிசோதகர் றெணால்ட், பொது சுகாதார பரிசோதகர்களான ஜெனோயன், தளிர்ராஜ், தர்மிகன் ஆகியோர் இணைந்த குழு செயற்பாட்டில் இரு உணவகங்களும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்தமை இனங்காணப்பட்டிருந்தது.

அதனையடுத்து குறித்த பிரச்சினைக்கு எதிராக முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ. தர்மிகனால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைவாக கிளிநொச்சி நீதிமன்ற நீதவானால் இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன், சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரை இரண்டு உணவகமும் தற்காலிகமாக மூடுமாறும் கட்டளையிடப்பட்டிருப்பது 
 

Leave a comment

Comment