மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி மாரியம்மன் ஆலயத்தில் தீக்குழியிலிருந்து நெருப்பு எழுகின்ற அதிசயம் இடம்பெற்றுள்ளது.
கிண்ணையடி மாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு கடந்த 02/07/2025 தொடங்கி 2025 /07/10 அன்று நிறைவு பெற்றது.
ஆடி மாதம் இடம்பெற்ற அம்மனின் திருச் சடங்கு
நேற்று 11/09/2025 வியாழக்கிழமை 7:40மணியளவில் ஆலயத்தில் லைட் (மின் குமிழ்) போட வந்த ஆலய தலைவர் மூடியிருந்த தீ குழியில் இருந்து தீ எரிவதை கண்டு நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார்.
ஆலய திருச் சடங்கு முடிந்து இரண்டு மாதம் கடந்த நிலையில் ஆலயத்தில் தீக்குழிக்குள் இருந்து நெருப்பு வருவதாக அறிந்த பக்தர்கள் வந்து பார்வையிடுகின்றார்கள்.


