TamilsGuide

கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக இலங்கையை வந்தடைந்த பயணியிமிருந்தே இந்த பாம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் இந்த மீட்பு மேற்கொள்ளப்பட்டது.

40 வயதுடைய அந்தப் பெண் பயணி, தனது பொதிகளில் பாம்புகளை மறைத்து வைத்திருந்தார்.
 

Leave a comment

Comment