TamilsGuide

19 மாதங்களின் பின் தந்தையை சந்தித்த இளவரசர் ஹாரி

பிரித்தானிய இளவரசர் ஹரி புதன்கிழமை (10) தனது தந்தையும் மன்னருமான மூன்றாம் சார்லஸை சந்தித்துள்ளார்.

மன்னரின் தனிப்பட்ட இல்லத்தில் ஒரு தனியார் தேநீர் விருந்துக்காக இருவரும் சந்தித்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். 76 வயதான மன்னர் சார்லஸும் இளவரசர் ஹரியும் 19 மாதங்களில் பின்னர் சந்திப்பது இதுவே முதல் முறை.

ஹரியும் அவரது மனைவி மேகனும் 2020 ஆம் ஆண்டு அரச வாழ்க்கையை விட்டு வெளியேறி கலிபோர்னியாவுக்குச் சென்றனர். அதன் பின்னர் அரச குடும்பத்தைப் பற்றிய குறைகளை பகிரங்கமாக வெளியிட்டனர்.

இந்நிலையில் 40 வயதான ஹரி, பிரித்தானியாவின் கடுமையான நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களை அங்கீகரிக்கும் ஒரு தொண்டு நிறுவனமான விருதுகளுக்காக இங்கிலாந்தில் இருக்கிறார்.

திங்கட்கிழமை அவர் முதலில் விண்ட்சரில் உள்ள தனது பாட்டியின் கல்லறைக்குச் சென்று ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தி இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment