இந்தியாவில் இருந்து சாலை வழியாக லும்பினிக்கு பயணித்த 73 இலங்கை யாத்ரீகர்கள் கொண்ட குழு நேபாளத்திலிருந்து வெளியேற்றப்பட உள்ளது.
நேபாளத்தை விட்டு வெளியேறத் தயாராகும் வகையில் யாத்ரீகர்கள் இந்தியா-நேபாள எல்லையில் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாள குடிவரவு அதிகாரிகளின் அமைப்பு செயல்படாததால், நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்காக இலங்கை தூதரக அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
அங்குள்ள தூதரகத்தின் தகவலின்படி, நேபாள இராணுவம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது, மேலும் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஏற்கனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகவலின்படி, நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை 102 என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த அசாம்பாவிதங்களும் நடந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.


