TamilsGuide

எல்ல விபத்து - பேருந்து உரிமையாளர் கைது

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் நடந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் உரிமையாளர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு (04) எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் ஒருவர்.

விபத்துக்கு முன்னர் அவர் ஏதேனும் போதைப் பொருட்களை உட்கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இறந்தவர்களில் 12 பேர் தங்காலை நகர சபை ஊழியர்கள்.

இதற்கிடையில், காயமடைந்தவர்களில் 11 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
 

Leave a comment

Comment