யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் மருதனார்மடம்
ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில்
இன்று காலை 8 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
முச்சக்கர வண்டியொன்று வீதியில் வைத்து திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த துவிச்சக்கர வண்டி மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் நான்கு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/Athavannews/videos/1138292688361845


