TamilsGuide

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய யூ.பி.றோஹண ராஜபக்சவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, தற்போது கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றுகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 

Leave a comment

Comment