TamilsGuide

மட்டுப்படுத்தப்பட்ட களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவை

களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவைகள் கொஸ்கம ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டுப் பரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை (08) அவிசாவளை, புவக்பிட்டியவில் ரயில் ஒன்று தடம்புரண்டதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று நேற்று மாலை புவக்பிட்டிய மற்றும் அவிசாவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, களனிவெளி பாதையில் ரயில் சேவைகள் கொஸ்கம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment