அமெரிக்காவின் Powerball அதிர்ஷ்டக் குலுக்கில் இருவர் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்.
வெற்றியாளர்கள் அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டை மிஸோரி, டெக்சஸ் ஆகிய மாநிலங்களில் வாங்கியிருந்தனர். அவர்களது அடையாளம் வெளியிடப்படவில்லை.
அதிர்ஷ்டக் குலுக்கு நேற்று முன்தினம் (6 செப்டம்பர்) நடைபெற்றது. அதிர்ஷ்டக் குலுக்கு வரலாற்றில் வழங்கப்பட்ட இரண்டாம் ஆகப்பெரிய பரிசுத்தொகை இது. பரிசுத்தொகை பிரித்துக் கொடுக்கப்படும்.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் அதிர்ஷ்டக் குலுக்கில் 2.6 பில்லியன் வெள்ளி (2.04 பில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகையை வென்றிருந்தார்.


