கனடாவின் மொன்றியல் நகரின் வடப்பகுதியில் உள்ள ரிவர் டெஸ் பெராய்ரிஸ் Rivière des Prairies ஆற்றங்கரையில் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அல்பர்ட் பொராசோ பொலெவார்ட் Albert-Brosseau Boulevard மற்றும் ட்ரயாபியு அவன்யூ Drapeau Avenue சந்திப்பு அருகே தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தைச் சுற்றி விசாரணைக்காக பெரிய பாதுகாப்பு வளையத்தை பொலிஸார் அமைத்துள்ளனர்.
பொலிஸ் மோப்ப நாய்களும் தேடுதல்களுக்காக ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உடல் அங்கு எத்தனை நேரமாக இருந்தது, குறித்த நபர் எவ்வாறு இறந்தார் என்பது இதுவரை தெரியவில்லை.
மேலும் எந்த உடல் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது என்பதைப் பற்றியும் பொலிஸார் எந்த விவரமும் வெளியிடவில்லை.


