TamilsGuide

தனுஷ் வெளியிட்ட இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கடந்த இரண்டு நாட்களாக இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இட்லி கடை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில், இட்லி கடை படத்தில் நடித்துள்ள நடிகர் ராஜ்கிரணின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை தனுஷ் இன்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அந்த பதிவில்,"எனது முதல் ஹீரோ ராஜ்கிரண் அவர்கள் சிவனேசனாக.." என்று குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment