TamilsGuide

28 Years Of Surya Acting Masterclass - ரெட்ரோ படத்தின் சிறப்பு காட்சி ரிலீஸ்

நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார். திரைப்படம் கடந்த மே 1 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியது. ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.235 கோடி வசூலில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா அவரது திரைப்பயணத்தில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடி வாழ்த்தும் வகையில் ரெட்ரோ படக்குழு ஒரு சிறப்பு காட்சியை வெளியிட்டுள்ளனர். அதில் படத்தில் இடம் பெற்ற சூர்யா சிரிக்க முயற்சிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு காட்சியின் நடிப்பே சூர்யா ஒரு நடிகராக யார் என்று நமக்கு புரிந்துவிடும்.
 

Leave a comment

Comment