TamilsGuide

காசாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது குண்டுவீசி இஸ்ரேல் தாக்குதல் - 41 பேர் உயிரிழப்பு

காசா நகரில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் கட்டாயப்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்த சூழல் நேற்று, இடம்பெயர்ந்த பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து குண்டுகளை வீசி இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 41 பேர் உயிரிழந்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

அக்டோபர் 2023-ல் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் 64,368 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 162,367 பேர் காயமடைந்துள்ளனர். காசா நகரை முழுமையாக கைப்பற்ற ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்க்கது. 
 

Leave a comment

Comment