TamilsGuide

எல்ல-வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களின் இறுதி அஞ்சலி

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் (04) ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இதுவரை 10 பேரின் உடல்கள் நகர சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலை பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணமாக சென்ற 32 பேர் அடங்கிய குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே நேற்று முன்தினம் (04) எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24வது கிலோமீற்றர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ. கே. ரூபசேன உட்பட நகர சபையின் 12 ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர்.
 

Leave a comment

Comment