TamilsGuide

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராகப் போராட்டம்

மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சி முறையிலான போராட்டம் இன்று 33 நாளாகவும் இடம்பெற்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இப் போராட்டத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வர்த்தகர்கள் பொது அமைப்புக்கள் ஆதரவு வழங்கியுள்ளன.

அந்தவகையில் இன்று புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை, மற்றும் மக்கள் பங்கேற்கேற்று தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment