ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளதாவது” அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த காரணியாகும்.
ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பொது நிதியைப் பயன்படுத்துவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
நமது அனைத்து அரச கொள்கைகளும் குழந்தைகளின் மிக உயர்ந்த தேவைகளைப் பிரதிபலிக்கின்றன. நமது அரசாங்கம் குழந்தைகளை நமது பொறுப்புகளின் மையமாக வைத்திருக்கிறது.
2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்ட பல நிதி உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடானது சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்காக வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் வரலாற்றில் இதுவரை ஒதுக்கப்படாத மிகப்பெரிய ஒதுக்கீடாகும்” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.


