TamilsGuide

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் – பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவிப்பு

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில் நிறைவேற்றப்படவில்லை.

எனவே, பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றி பரிசிலீக்கப்படுகின்றது. இணக்கம் எட்டப்பட்டால் அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும். தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்” இவ்வாறு  பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க  தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment