கனடாவின் மானிடோபாவில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட நபரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் எதனால் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த கத்தி குத்து தாக்குதலினால் பொதுமக்களுக்கு பாதிப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வின்னிபெக்கிலிருந்து சுமார் 160 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹலோ வோட்டர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பகுதியில் பழங்குடியின சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


