TamilsGuide

விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி 2 படத்தின் பூஜை கிளிம்ப்ஸ்

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்த திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து கட்டா குஸ்தி பகாம் 2 எடுக்கவுள்ளனர். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் நகைச்சுவையான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் கதாநாயகியாக ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் இசையை ஷான் ரோல்டன் மேற் கொள்கிறார். இந்நிலையில் படத்தின் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

Leave a comment

Comment