TamilsGuide

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பு

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) ஆலோசகர் சமூக மருத்துவர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.

முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த நிலைமையைத் தணிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது:

2022 ஆம் ஆண்டில், அடையாளம் காணப்பட்ட அனைத்து புற்றுநோய் நோயாளிகளில், 904 பேர் சிறுவர்கள் ஆவர்.

கடந்த 15 ஆண்டுகளில் தரவுகளைப் பார்க்கும்போது, ​​சிறுவர் பருவ புற்றுநோய் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்பது தெளிவாகக் காட்டுகிறது.

இந்த எண்ணிக்கை பொதுவாக 600 முதல் 800 வரையிலான வரம்பிற்குள் உள்ளது.

இப்போது, ​​ஆண்டுதோறும் சுமார் 900 சிறுவர் பருவ புற்றுநோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

2019 ஆம் ஆண்டில் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் இறப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றால் சிறுவர்களுக்கு புற்று நோய்களை குறைக்கலாம் – என்றார்.
 

Leave a comment

Comment