வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


