இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து, மன்னாரின் நருவிலிக்குளம் கடலோரப் பகுதியில் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து, நடத்திய சிறப்புத் தேடுதல் போது 906 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதி 203 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025 செப்டம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் நருவிலிக்குளம் கடலோரப் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதலின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னாரில் உள்ள முருக்கன் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.


