TamilsGuide

அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசிய கனடிய பிரதமர்

கனடிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கனடிய அமைச்சரவை கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் நீண்ட நேரம் பேசியதாகவும், அந்த உரையாடல் “நல்லதாக” இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் தற்போது உலகில் எந்த நாட்டுக்கும் இல்லாத மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது எனக் கார்னி கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளின் பலன்கள் எதிர்காலத்தில் தெரியவரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 

Leave a comment

Comment