TamilsGuide

இலங்கைக்கு டூர் போலாமா - சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம்

இலங்கையின் முக்கிய வருவாயாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இலங்கைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட அதிகமாகும். அதில் 46,473 பேர் இந்தியர்கள் ஆவர். பிரிட்டன் (17,764) ஜெர்மனி (12,500) சுற்றுலாப் பயணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
 

Leave a comment

Comment