வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (செப்டம்பர் 3) காலை இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு ஆஜராகிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுமார் 5 மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பிடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர், கடந்த ஓகஸ்ட் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்றைய தினம் அவரை முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க. எஸ். போதரகம, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, உரிய வாக்குமூலத்தை அளித்த பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


