விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில் அவருக்கு எதிர்வரும் செப்டம்பர் 09 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


