TamilsGuide

மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையை  மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர்  புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 26 வயதுடைய சந்தரலிங்கம் சுரேந்திரன் என்பவரே ,இவ்வாறு  உயிரிழந்துள்ளாரர்.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் 1400 க்கும் மேற்பட்ட புகையிரத கடவைகள் இருந்தும் 400 க்கும் மேற்பட்ட கடவைகள் பாதுகாப்பற்றதாகவே காணப்படுகிறது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும்பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளே காட்சி தருவதை காணக்கூடியதாகவுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment