TamilsGuide

குண்டு துளைக்காத ரயிலில் சீனா பயணமான வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனாவுக்குச் சென்றுள்ளார்.

திங்கட்கிழமை (1) இரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட அவர், சீனா சென்றடைந்தார்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளவே கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார்.

இந்த இராணுவ அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிம் ஜாங் உன் கடந்த 2023ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்று புட்டினை சந்தித்தார்.

அதற்குப் பிறகு, இதுவே அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் ஆகும். இதற்கு முன்னர், அவர் 2019ஆம் ஆண்டு சீனாவுக்குச் சென்றுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதுடன், வீரர்களையும் அனுப்பி வருவதாக வடகொரியா மீது உக்ரைன் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment