TamilsGuide

அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற நடைபெற்றது

ஶ்ரீமதி அற்புதராணி கிருபைராஜ் அவர்களின் அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 31ம் திகதி மாலை றிச்மண்ட்ஹில் நகரில் அமைந்துள்ள RICHMOND HILL CENTRE FOR PERFORMING ARTS கலா மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தின் பிரதான நட்டுவாங்கத்தை அவரது குரு ஶ்ரீமதி அற்புதராணி கிருபைராஜ் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் கையேற்று சிறப்புடன் அரங்கேற்றத்தை நடத்திச் சென்றார்.

பக்கவாத்தியக் கலைஞர்களாக பாட்டு: அருண் கோபிநாத் அவர்கள்- மிருதங்கம்- கெளரிசங்கர் அவர்கள்-வயலின்-ரி.என். பாலமுரளி அவர்கள்- புல்லாங்குழல்-சுருதி பாலமுரளி அவர்கள்

ஆகியோர் நேர்த்தியாக தமது பங்களிப்புக்களை வழங்கி அரங்கேற்றத்தை இறுதிவரையிலும் கண்ணும் கருத்துடன் நகர்த்திச் சென்றனர்.

ஆரம்ப உருப்படியாகத் மேடையில் தோன்றிதனது 'கணேச அர்ப்பண' த்தை வழங்கிய மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் ஆற்றல் 'ஒரு பானை சோந்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற கூற்றுக்கு இணங்க இறுதிவரை அதே அர்ப்பணிப்பு -கவனிப்பு- உற்சாகம் ஆகியவற்றோடு இறுதி வரை சென்று தித்திப்பாகக் அளித்த 'தில்லானா' வுடன் நிறைவுற்றது.

பார்வையாளர் திரளாக வந்து இறுதிவரை மண்டபத்தில் நிறைந்திருந்து நிறைவுடன் இல்லம் ஏகினர்.

இவ்வாறான அரங்கேற்றங்கள் ஒரு சிலவே இந்த மண்ணில் தமிழர் கலையும் பண்பாடும் நீண்ட நா ட்களுக்கு நிலைத்திருக்கும் என்பதற்கு சாட்சியமாக விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது.

படங்களும் தகவலும்: சத்தியன்

Leave a comment

Comment