செம்மணி மனிதபுதைகுழி உட்பட வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்படும் மனத புதைகுழிகள் மற்றும் இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி இன்று நான்காவது நாளாகவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கடந்த 29ம் திகதி குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அந்தவகையில் கிளிநொச்சி பளை நகர பகுதியில் இன்றும் போராட்டம் இடம்பெற்றது
போராட்டத்தில் பளை பிரதேச சபை உறுப்பினர்கள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதுடன் தமது கையெழுத்துக்களையும் பதிவு செய்திருந்தனர்.


