TamilsGuide

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்

கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் தப்பியோடிய பெண் ‘இஷார செவ்வந்தி’ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்ததாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து இலங்கை பொலிஸார், இந்தோனேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் நடந்தன.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பேக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்.
 

Leave a comment

Comment