கனடா அரசு நாடு முழுவதும் 2 பில்லியன் மரங்கள் நடும் இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக அறிவித்துள்ளது.
2021 இல் தொடங்கிய இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 228 மில்லியன் மரங்கள் நட்டுள்ளதாகவும், மொத்தம் ஒரு பில்லியன் மரங்களுக்கு உடன்படிக்கைகள் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் மாத நிலவரப்படி, 11 மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள், 58 பழங்குடியின சமூகங்கள், 30 நகராட்சிகள், 88 தன்னார்வ அமைப்புகள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றன.
இந்த முயற்சி, வனவிலங்கு வாழிடங்களை பாதுகாப்பது, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது, மற்றும் கார்பன் உறிஞ்சலை அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், புதிய தேசிய பூங்காக்கள், கடல்சார் பாதுகாப்புப் பகுதிகள், நகரப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, 2030க்குள் கனடாவின் நிலம் மற்றும் நீரின் 30% பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்படும்.
அரசு 2005 அளவிலிருந்து 40% உமிழ்வை குறைப்பதையும், பூச்சிய உமிழ்வை அடைவதையும் உறுதிப்படுத்தியுள்ளது.


