TamilsGuide

உக்ரைன் முன்னாள் சபாநாயகர் சுட்டுக் கொலை 

உக்ரைன் நாடாளுமன்றின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி மேற்கு நகரமான லிவிவ்வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவ வருகின்றன.

இந்த தாக்குதல் மிக கொடூரமான சம்பவமாகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி​ தெரிவித்துள்ளதுடன் பருபியின் குடும்பத்தினருக்கு இரங்கல் வௌியிட்டுள்ளார்.

54 வயதான பருபி, உக்ரைனின் வெகுஜன போராட்டங்களின் போது முக்கியத்துவம் பெற்றவராவார்.

அவரது போராட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளை ஆதரித்ததுடன் 2014 இல் ரஷ்ய சார்பு முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை வீழ்த்துவதற்கு வழி வகுத்தது.
 

Leave a comment

Comment