TamilsGuide

ஈரானில்  இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 8 பேர் கைது

ஈரானின் முக்கிய தளங்கள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குறித்த தகவல்களை இஸ்ரேலின் மொஸாட் எனும் புலனாய்வு, சிறப்புச் செயல்பாட்டு அமைப்புக்குக் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரை ஈரான் இராணுவம் கைதுசெய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூன் மாதம் நடத்தப்பட்ட இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதல்களின்போது மொஸாட் உளவு அமைப்புக்கு அந்த முக்கிய தகவல்களைக் குற்றஞ்சாட்டப்பட்டோர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மொஸாட் அமைப்பிடமிருந்து இணையவழி சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடன் தொடர்ந்து 12 நாள் போரின்போது ஓகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஈரானியக் காவல்துறை 21,000 சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக ஈரானிய அரசு ஊடகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை மாதங்களில் இஸ்ரேலுக்குத் தகவல் அளித்ததாகச் சந்தேகிக்கப்படும் குறைந்தது எட்டு பேரின் மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment