தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாலையா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து வரலாறு படைத்தார்.
இந்நிலையில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாலையாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தெலுங்கில் பேசிய ரஜினிகாந்த், "பாலகிருஷ்ணா பேசும் பன்ச் வசனங்களை அவர் தவிர வேறு யார் பேசினாலும் சிறப்பாக இருக்காது. பாலையா என்றாலே POSITIVITY. அவர் எங்கு இருந்தாலும், மகிழ்ச்சியும், சிரிப்புமே இருக்கும். அவருக்கு போட்டி அவரே. பாலையா படம் நன்றாக ஓடுகிறது என்றால், அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைவார்கள்; அதுவே அவரது பலம்" என்று தெரிவித்தார்.


