ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தியான்ஜெனில் நாளை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி. நடந்து வரும் மோதல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை வழங்குகிறது எனதெரிவித்துள்ளார்.


