தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 05 ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் பதிவானதுடன், அது தொடர்பான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) இரவு தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சைத்யா வீதிப் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் குறித்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


