கனடாவின் முதல் வணிக விண்கலம் ஏவும் நடவடிக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோர்ட்ஸ்பேஸ் (NordSpace) நிறுவனம் உருவாக்கிய, "டைகா" (Taiga) எனப்படும் ஒரே என்ஜின் கொண்ட விண்கலம் சோதனை ஏவுதலே இதுவாகும்.
சுமார் ஆறு மீட்டர் உயரமுள்ள இந்த விண்கலம் 3D பிரிண்டட் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் திங்கட்கிழமைக்கு திட்டமிடப்பட்ட ஏவுதல், வானிலை சிக்கலால் ஒத்தி வைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஏவுதல் நிறுத்தப்பட்டது.
இது எளிதில் சரி செய்யக்கூடிய பிரச்சனை. எங்கள் அடுத்த முயற்சி வெற்றியாகும் என்பதில் நம்பிக்கை உள்ளது” என நோர்ட்ஸ்பேஸ் தலைமை செயல் அதிகாரி ராகுல் கோயல் (Rahul Goel) கூறியுள்ளார்.


