ஐரோப்பாவில் வாகன விற்பனை முந்தைய மாதங்களைவிட ஜூலை மாதத்தில் அதிகரித்து காணப்படுவதாக ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர் சங்கம் (European Automobile Manufacturers Association) தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர் சங்கம் (European Automobile Manufacturers Association – ACEA) வெளியிட்ட அறிக்கையில், ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் வாகன விற்பனை முந்தைய மாதங்களைவிட அதிகரித்து 5.9% ஆக உயர்வடைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அதிகபட்ச வளர்ச்சியாகும் .
அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளக்-இன் ஹைபிரிட் வாகனங்கள் (PHEV) விற்பனையில் 2023 ஜனவரிக்குப் பிறகு மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், பட்டரி-எலக்ட்ரிக் வாகனங்கள் (BEV) விற்பனையும் ஆகஸ்ட் 2023 முதல் மிக அதிக வளர்ச்சியை காண்கிறது.
ஜேர்மனி, ஜூன் மாதம் அறிமுகப்படுத்திய EV ஊக்க திட்டம் மூலம் ஜூலை மாதத்தில் BEV விற்பனை 58% மற்றும் PHEV விற்பனை 83.6% உயர்ந்துள்ளது.
எவ்வாறும், ஐரோப்பிய வாகனத் துறைக்கு அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் மற்றும் சீன போட்டியாளர்கள் மிகப் பெரிய சவால்களாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


