TamilsGuide

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையம் முன்பாக இருந்த பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, பின்னால் வந்த டிப்பர் லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதனைத் தொடர்ந்து டிப்பர் வாகனத்திற்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றையவர் படுகாயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment