TamilsGuide

2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது.

16 பேர் கொண்ட இந்த அணியினை சரித் அசலங்க வழிநடத்துகிறார்.

இதில் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான உள்நாட்டு தொடரின் போது சுழற்பந்து வீச்சாளரும், துடுப்பாட்ட வீரருமான ஹசரங்க காயமடைந்தார்.

இதனால், இன்று (29) ஆரம்பமாகும் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் அவர் இடம்பெறவில்லை.

ஆனால், அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பகவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கு அவர் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ஹசரங்காவைத் தவிர, ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் சாமிக கருணாரத்ன, முன்னாள் தலைவர் தசுன் ஷனக உள்ளிட்ட பல வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர்களும் உள்ளனர்.

இதற்கிடையில், மஹீஷ் தீக்ஷன மற்றும் துனித் வெல்லலகே ஆகியோருடன் சேர்ந்து, ஹசரங்க இந்த போட்டிக்கான அவர்களின் முதன்மையான சுழற்பந்து வீச்சாளராக இருப்பார்.

போட்டிகள் செப்டெம்பர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணி செப்டம்பர் 13 ஆம் திகதி பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்துடன் தனது 2025 ஆசியக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கும்.

ஐசிசி ஆசியக் கிண்ண அரங்கில் இரண்டாவது வெற்றிகரமான அணியாக இலங்கை உள்ளது.

அவர்கள் ஆறு முறை கிண்ணத்தை வென்றுள்ளனர்.

இறுதியாக அவர்கள் தசுன் ஷானக தலைமையில் 2022 ஆம் ஆண்டில் வெற்றி கொண்டனர்.

இலங்கை அணி

சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டீஸ், குசல் ஜனித் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டீஸ், கமில் மிஷாரா, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார மற்றும் மதீஷா பத்திரன
 

Leave a comment

Comment